பெரியன கேட்கின்
உலகின் மிகபெரிய சூரிய ஒளி மின் நிலையம்
சூரிய-னின் கதிர்-கள் ஆற்-றல் மிக்-கவை. அதிலி-ருந்து மின் உற்ப-த்தி செய்ய-லாம் என்-பது அறிந்-ததே. சுற்றுச்-சூழ-லை மாசுபடுத்-தாத மின்-சார தயா-ரிப்பு இது. ஸ்பெ-யின் நாட்-டின் ஒல்–மிடிய சூரிய ஒளி மின் நிலையம்-தான் உலகின் மிகப்பெரியது.
மேற்கு வங்-கத்தில் உள்ள- சூரிய மின் நிலை-யம் 2 மெகா-வாட் மின் உற்-பத்தித் திறன் உடையது.
நம் தலை-முறைக்கு மாசில்-லா சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்-காத மின்சாரத்-தைக் கொடுக்க இவ்வளவு சூரிய வெப்-பம் கிடைக்-கும் நம் நாட்-டை முதன்மை நா-டாக்க இந்தியா-வில் மாண்புமிகு தலைமை அமைச்-சரும், மாண்பு-மிகு செல்வி ஜெயல-லிதா முதலமைச்-சரும் செய்தால் என்ன? பிஞ்சுகளின் கேள்வி.
தாய்மொழி
தாய்க்கு நிகர்தான் தாய்மொழி அதை
உயிருக்கு மேலாய் நீ மதி
தமிழனாகப் பிறந்தாய்
தமிழைப்பேசி வளர்ந்தாய் இன்று
தமிழைமறந்து தலைகுனிந்து
உன்னை நீ இழந்தாய்…..
ஆட்டுப்பாலில் மாட்டுப்பாலைக் கலந்து குடிப்பாயா?
கேழ்வரகில் நெல்லரிசையைக் கலந்து சமைப்பாயா?
யோசிக்கணும் தமிழா – நீ
பேசுவது தமிழா _- அட
ஆங்கிலமே கலக்காம தமிழில் பேசு முழுதாய்!
மொழிகளிலே சிறந்த மொழி
நம் தமிழ்தான் என்று – நீ
புரிஞ்சுக்கிட்டா நன்று – தமிழா
தாய்மொழிக்கு செய்திடு நல்தொண்டு !
ம. கவிக்கருப்பையா எம்.ஏ., பெரியகுளம்.
அத்தி பூக்குமா?
அத்தி பூத்த மாதிரி என்று சொல்வார்கள். அப்ப அத்திப் பழங்கள் எப்படிக் கிடைத்-திருக்கின்றன என்றெல்லாம் சந்தேகம் எழும்பும். ஒரு மரம் பூக்காமல் காய் ஏது கனி ஏது. அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது. அந்தப் பூக்கள் நம் பார்வைக்குத் தெரிவதில்லை. கேலிக்ஸ் எனப்படும் அதன் பச்சை நிறக் காம்புப் பகுதிக்கு உள்ளேயே பூ பாகம் மறைந்து கொள்வதால் பூக்கள் நம் பார்வைக்குத் தட்டுப்படுவதற்குள் பூவின் சூல் பையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு ஒரு அவசரத்துக்கு உட்பட்டு காயாகி பின் கனியாகி இலைகளுக்கு மேல் எட்டிப் பார்க்கிறது.
நமது பார்வைக்குக் கிடைப்பவை இந்தக் கனிகள்தான். அத்தி மரம்தான் இப்படியென்று இல்லை. அரச மரங்களிலும், ஆல மரங்களிலும் கூட நாம் பூக்களைப் பார்க்க முடியாது. நேரடியாய் நமக்குக் கிடைப்பவை பழங்கள்தான்.
-ராஜம்
பிஞ்சு மடல்
அன்புள்ள, தாத்தா அவர்க-ளுக்கு வணக்கம்.
நான் பெரியார் பிஞ்சு இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். செப்டம்பர் மாத இதழில் சாமிகளின் பிறப்பும் இறப்பும் தொடரை நானும் எனது தங்கை யாழ் பிரபாவும் சேர்ந்து எங்கள் பெற்றோ-ருக்கு வாசித்துக் காட்டினோம்.
இந்தத் தொடர் கடவுள் பற்றிய சந்தேகங்களை, மூட கருத்துக்களை குழந்தை-களுக்கு புரியும் வண்ணம் மிக எளிமையாக அருமையாக விளக்கப் பட்டுள்ளது. இந்தத் தொடர் மூலம் மனிதனைத் தவிர உலகில் மற்ற எந்த உயிரினமும் சாமி கும்பிடு-வதில்லை எனத் தெரிந்து கொண்டோம்.
மேலும் பூமி பிறந்து 450 கோடி ஆண்டு-கள் ஆகின்றன என்ப-தயும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களில் எல்லாம் கோவில், குளம், மசூதி, சர்ச், சாமி, கடவுள் என்று எதுவும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்-டோம். நமது பெரியார் தாத்தாவின் கருத்துக்களை இந்தத் தொடர் எளிமையாக விளக்கு-கிறது. தொடர்ந்து மாதா மாதம் பெரியார் பிஞ்சு வாசிக்க ஆவலாக உள்ளேன். நன்றி தாத்தா.
இப்படிக்கு, உங்கள் பெயர்த்தி,
ம.சி.எழில்மதி, ராசபாளையம்
நீதிக்கதை
உருவத்தில் சிறியவனாக இருப் பதால் யாரையும் ஏளனம் செய்யக்கூடாது.அவன் வேறு ஒரு வகையில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு அருகே செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.
ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் கீறுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.
அதற்கு ‘ஈ’ ஏய் ! நீ பலசாலியாய் இருக்-கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.
இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் முடியு-மாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..-அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் கடிக்க முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…
சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே கீறிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது.. தான் உடலளவில் வீரமாய் இருந்-தாலும்.. ஒரு சிறு ஈ தன்னை பாடாய்படுத்தி பாடம் புகட்டிவிட்டதே!
நீதி:- உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது
– சூர்யா