குட்டிக் குரங்கு
குரங்குகளைப் பார்த்திருப்பீர்கள்.
அவற்றின் குட்டிகளையும் பார்த்திருப்பீர்கள். அதனை குட்டிக் குரங்கு என்று அழைப்போம்.
அது வளர்ந்ததும் பெரிய குரங்காகிவிடும். ஆனால், கடைசி வரை குட்டியாகவே இருக்கும் ஒரு வகை குரங்கு மேற்கு பிரேசில் நாட்டின் கேனோபிஸ் காடுகள், தென் கிழக்கு கொலம்பியா, கிழக்கு ஈக்வடார், கிழக்கு பெரு மற்றும் வடக்கு பொலிவியா போன்ற நாடுகளில் உள்ளது.
உலகில் உள்ளா குரங்கு வகைகளிலேயே மிகவும் சிறிய வகைக் குரங்கு இதுதான்.
14 முதல் 16 செ.மீ.அளவு வரைதான் வளரும். (வாலுடன் சேர்த்தால் 15 முதல் 20 செ.மீ.).அதற்குமேல் வளராது.
ஆண்குரங்கின் எடை 140 கிராம். பெண் குரங்கின் எடை 120 கிராம்.பாக்கெட் குரங்கு,விரல் குரங்கு என்று இதனை செல்லமாக அழைக்கிறார்கள்.
இவற்றின் ஆயுள் 11 முதல் 12 ஆண்டுகள்.