பிஞ்சுமனம்
இவள் என் மகள் ‘தங்க மதிவதினி’. ஹிரிநி படிக்கிறாள். வழக்கமாக என்னுடைய செல்போனை எடுத்து ஏதாவது செய்து கொண்டிருப்பாள். இன்று காலை ஆறு மணிக்கு, அதுபோலவே செல்போனை எடுத்து பட்டனை அழுத்தினாள்.
செல்போனிலிருந்து “விடுதலைப்புலியை எனக்கு தெரியும்” என்கிற பாடல் பாட, அதை என் மகள் கேட்டுக்கொண்டு இருந்தாள், நான் அரைகுறை தூக்கத்தில் இருக்கிறேன், பாட்டு படிப்பது எனக்கு கேட்கிறது. பாட்டு சத்தம் கேட்டவுடன் என்னுடைய தாயார் வந்தார்கள். என் மகளை அதட்டினார்கள்.
“காலையிலேயே இந்த பாட்டெல்லாம் கேட்க கூடாது, இயேசு சாமி பாட்டு தான் கேட்கணும்” என்று செல்போனை பிடுங்க முயன்றார்கள். அப்போது என் மகள் “நாங்கெல்லாம் யாரு டைகருல்ல ! இயேசு சாமி என்னத்த கிழிச்சாரு?” என்று கேட்டு விட்டு கட்டிலை விட்டு இறங்கி ஓடி விட்டாள்.
என் மகளை அடிக்க என் தாயார் ஓடினார். கடவுள் மறுப்புக்கொள்கையை பற்றி ஒருநாளும் மகளிடம் பேசியதில்லையே என்று எனக்குள் ஆச்சரியமாக இருந்தது.
சிறு குழந்தை களிடம் கடவுளை பற்றி சொல்ல வில்லை என்றால், கடவுள் என்கிற பொருள் இருப்பதே அவர்களுக்கு தெரியாது என்றார் அறிவாசான் பெரியார். அது எவ்வளவு உண்மை என்று இன்றைய சம்பவம் எனக்கு உணர்த்தியது.
– தனது முகநூல் பக்கத்தில்
வால்ட்டர் வில்லியம்ஸ்