செயற்கை மூளை
மனித உடலுக்கு தேவையான செயற்கை உறுப்புகளை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது செயற்கை மனித மூளையும் உருவாக்கப் பட்டுள்ளது. இது மனித மூளையை போன்று நுண்ணறிவுடன் செயல்படுகிறது. சூப்பர் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கண் மற்றும் ரோபோடிக்கையும் உருவாக்கப்பட்டு அதன்மூலம் வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டது. இந்த செயற்கை மூளை 25 லட்சம் நரம்பணுக்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான் என பெயரிடப்பட்டுள்ளது. இதை கனடாவில் உள்ள வாட்டார்லு பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.
செயற்கையாக தயாரிக்கப் பட்டுள்ள இந்த மூளை மனித மூளையை போன்று துல்லிய மாக செயல்படுகிறது. இது விஞ்ஞான உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.