பஹாமாஸ்
அமைவிடம் : 3,000 தீவுகளைக் கொண்ட இந்நாடு அட்லாண்டிக் பெருங்கடலில் க்யுபாவுக்கு வடக்கே, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது.
பரப்பளவு : 13,939 சதுர கிலோ மீட்டர்கள்
தலைநகரம் : நேசா(Nassau)
மக்கள் தொகை : 3,54,000 (2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி) இவர்களில் 85% ஆப்ரிக்கர், 12% ஐரோப்பியர், 3% ஆசிரியர் மற்றும் லத்தீனர்கள்
அலுவல் மொழி: இங்கிலீஷ்
ஆட்சிமுறை: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் ஆளுகையின் கீழ் இயங்கும், நாடாளுமன்ற ஜனநாயகநாடு. 1973 ஜூலை 10ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.
ஆளுநர் : சார் ஆர்தர் போல்க்ஸ்
தலைமை அமைச்சர் : பெர்ரி கிறிஸ்டி
நாணயம் : பஹாமியன் டாலர்
தொழில் : சுற்றுலா முதன்மைத்தொழிலாக உள்ளது.
அயல்நாட்டு வணிக நிறுவனங்களின் வங்கித்தொழில் இன்னொரு வருவாய் வழியாக உள்ளது.