குட்டித் தாள்கள் வெட்டித் தாள்கள் அல்ல..
சின்னச் சின்னக் குறிப்புகளை எழுதுவதற்கென்று தனியாக அழகான குறிப்பேடுகள் வாங்குகிறோம். அது தேவையா?
என்ன செய்யலாம்?
இருபக்கமும் பயன்படுத்துவது. தொகுத்து புதிய ஏடாகப் பயன்படுத்துவது தவிர, அவசரத்திற்கு எழுதுவதற்கென்று தாள்கள் தேவைப்படும். தேவையற்றவை என்று நாம் கருதும் துண்டுத் தாள்களை கோர்த்து/அடுக்கி வைத்திருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்.
பழைய அழைப்பிதழ்கள், ரசீதுகளின் பின்பகுதி, சிட்டைகள் இவற்றையெல்லாம் பயன்படுத்தலாமே! கடைகளில் பயன்படுத்துவதைப் பார்த்திருக் கிறீர்களா? குறிப்புகள் எழுத, பொட்டலம் மடிக்க, அட்டைக் கட்டு கட்ட என்று அனைத்துக்குல் பழைய தாள்கள் வீணடிக்காமல் பயன்படுத்தப்படும்.
உண்மையில் சிக்கனத்தைக் கற்க வேண்டுமென்றால் பல பொருள்களையும் விற்கும் கடையைச் சென்று பாருங்கள். எதையும்
வீணாக்காமல் பயன்படுத்தும் நுணுக்கத்தைக் கற்கலாம்.