சிறுநீரகம்
சிறுநீரகம் முக்கியமான ஒரு கழிவு நீக்க உறுப்பாகும். இது இணையாக அமைந்த அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட, அவரை விதை வடிவ உறுப்பு ஆகும். இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் அமைந்து உள்ளது. வளர்ந்தவரின் சிறுநீரகம் 12 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் 3 செ.மீ. பருமனும் உடையது.
சிறுநீரகத்தின் வெளிப்பகுதி குவிந்தும் உட்பகுதி குழிந்தும் காணப்படுகிறது. குழிந்த உட்பகுதி முதுகெலும்புத் தொடரை நோக்கி இருக்கும். செரித்தல் சுரப்பியான கல்லீரல் வலது சிறுநீரகத்தின் மேலே காணப்படுவதால் வலது சிறுநீரகம் சற்று தாழ்வாகக் காணப்படும்.
சிறுநீரகம் கேப்சியூல் என்ற இழைகளால் ஆன சவ்வினால் மூடப்பட்டு உள்ளது. சிறுநீரகக் குழல்கள் சிறுநீரகங்களைச் சிறுநீரகப் பையோடு இணைக்கின்றது. சிறுநீரகப் பை தற்காலிகமாக சிறுநீரைச் சேமித்து வைக்கின்றது. சிறுநீரைச் சேமித்து வைக்கின்றது. சிறுநீரகப் புறவளி வழியாக சிறுநீர் வெளித் தள்ளப்படுகின்றது.
சிறுநீரகத்தில் ஏறக்குறைய ஒரு மில்லியன் நுண்ணிய நெஃப்ரான்கள் அமைந்துள்ளன. இந்த நெஃப்ரான்கள் சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு ஆகும். மேலும் சிறுநீரகம் இரத்த அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுநீரகம் வேலை செய்கிறது.
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 4,50,000 (நான்கு இலட்சத்து அய்ம்பதாயிரம்) நெஃப்ரான்கள் பணிபுரியும் நிலையில் இருந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும்.
– க. கார்த்திகா, 9ஆம் வகுப்பு அ பிரிவு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, நெசவாளர் காலனி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.