பிஞ்சு மடல்…
நன்றி அய்யா,
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறேன். கடந்த பெரியார் பிறந்த தின வினா-_விடை போட்டியில், மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்று, உயரிய பெரியார் 1000ம் வெற்றிச்சான்றும் வாங்க, எனது தந்தையாரின் இயக்க ஈடுபாடும், பெரியார் கட்சி ஆதரவாளராகவும் இருந்ததால் வென்றேன்.
பிப்ரவரி மாத பெரியார் பிஞ்சு திடீரென எனக்கு வந்து சேர்ந்தது. பயனுள்ள பகுத்தறிவு கவிதைகள் நெஞ்சைத் தொட்டன. அர்த்தமுள்ள பெரியார் பிஞ்சு இதழ் – நிச்சயம் மூடப்பழக்கத்தின் மூச்சை – நிறுத்தும் – நிஜம்! நன்றி.
உணர்வுகளுடன் உங்களோடு…
ச.சுவாதி, புதுகை- கூற்றம்
அன்புள்ள தாத்தாவுக்கு,
வணக்கம். தங்களின் பெரியார் பிஞ்சு, இளம் பிஞ்சு நெஞ்சங்களை மகிழ்விக்கும். பிஞ்சுக்கவிதை, கட்டுரை, படக்கதை, மற்றும் பிஞ்சுகள் பக்கம் மிக மிக அருமை. இளம் மாணவர், மாணவியர்க்கு மட்டும் அல்லாது, கல்லூரி மாணவர், மாணவியர்க்கும் பயன்படும்படியான சிந்தனைக் கருத்துகள் அத்தனையும் தாங்கி வருவது பெரியார் பிஞ்சு ஒன்றே ஆகும்.
மேலும் தங்களின் அன்பு மடலோடு, மாதம் ஒருமுறை அறிவியல் அறிஞரைப் பற்றிய தொடர்பகுதியானது, இளம் பிஞ்சு நெஞ்சங்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. இத்தகு நற்பொக்கிஷமான பெரியார் பிஞ்சுக்கு சந்தா கட்டி உதவிய எனது தாத்தா ஒட்டன்சத்திரம் வீரகலாநிதி அவர்களுக்கும், தங்களுக்கும் இருகரம் குவிக்கும் நன்றி!
வணக்கம்.
அன்புள்ள,
ப.கவின்,
ஏழாம் வகுப்பு, பீளமேடு, கோவை-4