பிரமிடுகளின் நகரம் கெய்ரோ
– முனைவர் பேரா.ந.க.மங்களமுருகேசன்
கெய்ரோ எனில் எகிப்தின் தலைநகரம் என அறிவோம். உலகப் பழமையான நாகரிகங்களின் வரிசையில் இடம்பெற்ற நாகரிகம் எகிப்திய நாகரிகம்.
பெயர்க்காரணம்
லக்சார்
கெய்ரோ என்றால் வெற்றி நகரம் என்பது பொருளாகும். இது ஆப்ரிக்கக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
கி.பி.969ஆம் ஆண்டு கலீபாக்களின் ஆளுகை நகரமாகத் தோற்றுவிக்கப்பட்டது.
வரலாறு
இசுலாமிய உலகின் முதன்மை நகரமாக விளங்கிய கெய்ரோவை சலாதீன், அயூபித் முதலானவர்கள் ஆட்சி செய்தனர். நெப்போலியன் போனபார்ட் சிறிதுகாலம் ஆண்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் கீழ் எகிப்து வந்தது. 1922இல் கெய்ரோவைத் தலைநகரமாகக் கொண்டு விடுதலை பெற்றது.
பிரமிடுகள்
உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் கெய்ரோ நகருக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் கிசா என்னும் பகுதியில் உள்ளன. பிரமிடுகள் என்பவை எகிப்தைப் பலநூறு ஆண்டுகளுக்குமுன் ஆண்ட மன்னர்களின் கல்லறைகள் ஆகும்.
ஸ்பிங்ஸ்
ஸ்பிங்ஸ்
பிரமிடுகளின் அருகே ஸ்பிங்ஸ் எனப்படும் புகழ்பெற்ற பழமைச்சின்னம் இருக்கிறது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டு பூனையை நினைவுபடுத்தும் இப்பிரம்மாண்டமான சிலையான ஸ்பிங்ஸ், கட்டடக் கலையின் அதிசயம் ஆகும். மித் ரஹினா எனும் சிற்றூரைச் சுற்றிலும் இந்நகரின் அரிய பல சின்னங்கள் அமைந்துள்ளன. இரண்டாம் ராம்சேஸ் எனும் அரசரின் மாபெரும் சிலை அமைந்துள்ள கோவிலும், பாரோ எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் எகிப்திய அரசர்களின் நினைவாக கி.மு. 14ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட அல்பாஸ்டா ஸ்பிங்ஸ் எனும் பெருஞ்சிற்பமும், அப்ரிஸ் அரசரின் அரண்மனையின் அழிந்து போனவை களும் இங்குக் காணவேண்டியவை.
மெம்பிஸ் நகர அரசர்கள் பலரையும், உயர் குடியினரையும் அடக்கம் செய்த இடுகாட்டுப் பகுதியே சக்காரா அருகில் உள்ள இடமாகும். இங்குள்ள பல அழகிய பிரமிடுகளில் முதன்மையானது படிக்கட்டு அமைப்புகளைக் கொண்ட ஜோசர் பிரமிடு என்பதாகும்.
கெய்ரோ கோட்டை
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் கெய்ரோ கோட்டையினை அயூபித் அரசரான சலா அல்தினின் அலுவலர் முகம்மது அலியாஸ் என்பவர் கட்டியுள்ளார்.
அபூசிம்பல்
கெய்ரோவிலிருந்து 900 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அபூசிம்பல் எனும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடம் அனைவரும் காணவேண்டிய ஒன்று. நைல் நதிக்கரையில் உள்ள இரண்டு செங்குத்தான மலைப் பாறைகளைக் குடைந்து இரண்டு அற்புதமான ஆலயங்களை அமைத்துள்ளனர். இவை ரீஹெரெக்டே எனும் எகிப்தியர்களின் சூரியக் கடவுள் நினைவாக, கி.மு.1250இல் இரண்டாம் ராம்சேஸ் மன்னரின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டன.
கார்னக் கோயில்
பழமையான எகிப்தியக் கலைப்பொருட்களின் கண்காட்சி உலகின் மிகச் சிறப்பான அருங்காட்சியகங்களில் ஒன்று. பண்டையக் கட்டடக்கலை நுணுக்கமும், புது நாகரிகமும் கலந்து 1900ஆம் ஆண்டில் உருவான இக்காட்சியகத்தில் ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கும் அதிகமான பண்டைய எகிப்தியக் கலைப்பொருட்களைக் காணலாம்.
மனித உடல்களைப் பதப்படுத்திய மம்மி என்னும் மனித உடல்கள், கற்சவப்பெட்டிகள், சிற்பங்கள், சிலைகள், பண்டைய அணிகலன்கள், மண்ணாலான வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியன காணலாம்.
சக்காரா
மார்க்கோஸ் ஸ்மைகா பாட்சா என்பவரால் 1910ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. காப்டிக் அருங்காட்சியகம் எகிப்திய கிறித்துவ சமய வளர்ச்சியைக் காட்டுவது. இங்குப் பதினாராயிரத்திற்கும் அதிகமான கலைப்பொருட்கள் காட்சியில் உள்ளன. பண்டைய எகிப்தில் அரசர்கள் காலம், பிற்பட்ட கிரேக்க ரோமானிய காலம், இசுலாமியர் காலம் ஆகியவற்றில் ஏற்பட்ட கலை வளர்ச்சி அவற்றிற்கிடையேயான தொடர்பு ஆகியவற்றைக் காணலாம்.
மம்மி
கெய்ரோவிலிருந்து 650 கி.மீ. தொலைவில் உள்ள முதன்மை நகரம் லக்சார். பரந்து விரிந்துள்ள பாலைவனம், அழகிய நைல் நதி, அற்புதமான பண்டைக் கோயில்கள் ஆகியவற்றுக்குப் புகழ் பெற்றது. எகிப்தினுடைய வரலாற்றுச் சின்னங்களில் மூன்றில் ஒரு பகுதி இவ்விடத்தில் அமைந்துள்ளன.
புதிய கெய்ரோ
பழமையான கெய்ரோவில் புதுமையும் மிளிர்கிறது. கெய்ரோவின் முதன்மை வாணிப மய்யமான சந்தை காணத்தக்கது. இங்கு அழகுப் பொருட்கள், மரவேலைப்பாட்டுப் பொருட்கள், அணிகலன்கள் முதலியன விற்கப்படுகின்றன. எகிப்து நடனம், இசை, உணவு ஆகியன குறிப்பிடத்தக்கன. இது படகுச் சவாரிக்கும் பெயர் பெற்றது.