குட்டிக் கதை : நல்வழி காட்டிய குழந்தைகள்
ஓர் ஊரில் அழகான தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தத் தோட்டத்தில் பூக்கள் நிறைய இருந்தன. அந்தத் தோட்டம் அருகில் ஓர் ஏழை குடும்பத்துடன் வசித்து வந்தான். அவன் பெயர் குமரன். அவன் தினமும் மீன் பிடித்து விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனுக்கு அந்த ஏரியில் மீன்களே கிடைக்கவில்லை.
இதனால் தன் குடும்பத்திற்குப் பணம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டான். குடும்பத்தினரும் பசியால் வாடினர். இதனால் கவலையடைந்த குமரன் அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்று அமர்ந்தான். அங்கு மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்தபோது, இந்தப் பூக்களைப் பறித்துக் கட்டி நாம் விற்றால் பணம் சம்பாதிக்கலாமே என்று அவனுக்குள் ஒரு யோசனை தோன்றியது.
– எஸ்.பி. தொண்டறம்
உடனே அதைப் பறிக்க ஆயத்தமானான். அதைப் பார்த்த குழந்தைகள், அங்கிள் அதைப் பறிக்காதீங்க என்று குமரனைத் தடுத்தனர். நான் பிழைப்பதற்கு வேறு வழியேதும் இல்லை, இதைப் பறித்து விற்றாவது என் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்று நினைத்தேன். அதையும் தடுத்து விட்டீர்களே என்று ஏக்கத்துடன் கூறினான்.
உடனே, அவர்கள் இந்த ஏரியில் மீன் இல்லாவிட்டால் என்ன, வாருங்கள் நாங்கள் வேற ஏரியைக் காட்டுறோம். அதில் போய் நீங்கள் மீன் பிடிக்கலாம் என்று கூறி அந்த ஏரிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் சொன்னபடியே அந்த ஏரியில் நிறைய மீன்கள் பிடித்து விற்பனை செய்தான். பணமும் நிறைய கிடைத்தது. அந்தக் குழந்தைகளுக்கும் நன்றி கூறினான். இயற்கை படைத்த எதையும் பாதுகாப்பது மிகவும் நல்லது என நினைத்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றான்.
– எஸ்.பி. தொண்டறம்,
எட்டாம் வகுப்பு,அரசினர் உயர்நிலைப் பள்ளி, நசரத்பேட்டை.
பிஞ்சுகளே! உங்களுக்கும் கதை எழுதுவதில் ஆர்வம் இருப்பின், நீங்களும் பெரியார் பிஞ்சுக்கு எழுதி அனுப்புங்கள்.