கழுகு : ஒரு செய்தி
பறவை இனத்தில் கழுகுகள் 70 ஆண்டு கள் வரை உயிர் வாழ்கின்றன. 40ஆவது வயதிலிருந்து பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
அலகுகள் பெரிதாக வளர்ந்து உணவினை உண்ண முடியாத நிலை ஏற்படும். கால் நகங்கள் நீளமாக வளர்ந்துவிடும். இறக்கைகள் அடர்த்தியாக வளர்ந்து பறக்க முடியாது சிரமப்படும்.
இப்படியொரு சூழ்நிலையில், பெரிய அலகுகளைப் பாறைகளில் தேய்த்து உடைத்தும், தேவையற்ற நகங்களைப் பிய்த்து எறிந்தும், அடர்ந்த இறக்கைகளை உரித்தும் தன்னைத்தானே சரிசெய்து கொள்கின்றன. யாரும் சொல்லிக் கொடுக்காமல், எந்தப் பயிற்சியும் இல்லாமல், பிறருடைய உதவியுமில்லாமல் போராடி வெற்றி பெற்று, மீண்டும் 30 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
எட்டு எட்டா போனா…. எவரெஸ்ட் வந்துடும்…….
ஆசிரியர் நினைத்தால் மாணவனுக்கு மிகச் சுலபமாகப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்க முடியும்…
நான் அய்ந்தாம் வகுப்புப் படிக்கும்போது என் ஆசிரியர் என்னிடம், உனக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தெரியுமா..? என கேட்டபோது நான் படித்ததை மறந்துபோய் திருதிருவென விழித்தேன்…
அப்போது என் ஆசிரியர் சொன்னது, எட்டு எட்டா போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்குப் போய்டலாம். ஞாபகம் வச்சிக்கோ தம்பி..!
அவர் எவரெஸ்ட்டின் உயரம் 8848 மீட்டர் என்று அப்போது சாதாரணமாகச் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் அப்போதே மறந்திருப்பேன்…
ஆனால், இப்போதுவரை என் நினைவில் இருப்பது எட்டு எட்டா போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்குப் போய்டலாம்! என்பது மட்டுமே…! –
– முகநூலில் வெங்கட்ராமன் முருகன்