உலக நாடுகள் பெல்ஜியம் (Kingdom of Belgium)
தலைநகர்: புரூஸ்ஸல்ஸ்
பரப்பளவு: 30,528 ச.கி.மீ.
மொழி: டச்சு, ஜெர்மன், பிரெஞ்சு
மக்கள்தொகை: 11,035,948
நாணயம்: பெல்ஜியம் ஃபிராங் யூரோ
எழுத்தறிவு: 98%
அரசர்: இரண்டாம் ஆல்பர்ட் (Albert II)
பிரதமர்: எலோ டி ரூபோ (Ello Di Rubo)
ஆட்சி: நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி
அமைவிடம்: மேற்கு அய்ரோப்பாவில் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ளது. இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே உள்ளதால் இடை நாடு என்ற பெயரும் உண்டு. வடக்கில் நெதர்லாந்து, தென்கிழக்கில் லக்சம்பர்க், தெற்கில் பிரான்ஸ் உள்ளன.
விவசாயம்: கோதுமை, பார்லி, ஓட்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு, புகையிலை.
தொழில்: நார்ச்சணல், கண்ணாடி, ரசாயனப் பொருட்கள், நிலக்கரி, துணி, இரும்பு, எஃகு ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன.
சிறப்புகள்: ஆன்வெர்ப் துறைமுகம் உலகின் பெரிய துறைமுகங்களுள் ஒன்று. பெரிய இரத்தினக்கல் வணிக மய்யம் இங்கு உள்ளது. பெல்ஜியம் கண்ணாடி உலகப் புகழ் பெற்றது.