செம்பு
கற்கருவிகள் உலோகக் கருவிகளாக மாறியபின் உலோக காலம் (Metal Age) மலர்ந்தது.
அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்பு பற்றி மக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன.
பழங்காலத்தில் உள்ள செம்புச் சுரங்கங்களில் பிரபலமானது சைப்ரஸ் தீவில் உள்ளது.
சைப்ரஸ் என்பதிலிருந்துதான் செம்பு என்ற பெயரே உருவானது.
இலத்தின் மொழியில் செம்பிற்கு குப்ரம் (Cupram) என்று பெயர்.
ஆக்சைடுகளாகவும் சல்பைடுகளாகவும் செம்பு காணப்படுகிறது.
இயற்கைச் செம்புப் படிவங்களில் பெரும்பகுதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் காணப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவின் தென்பகுதியிலும் பொலிவியா நாட்டிலும் இயற்கைச் செம்பு கிடைக்கின்றது.
ரஷ்யாவில் பசுமை நிறம் கொண்ட படிகங்களாக சில இடங்களில் கிடைக்கிறது.
செம்பும் டின்னும் கலந்த கலப்பு உலோகம் வெண்கலம் ஆகும்.
செம்புக் களிம்பு தங்க ஆபரணங்களுக்குப் போலிகளைச் செய்யப் பயன்படுகிறது.
செம்பின் மின் கடத்தும் திறன் இரும்பைவிட 5 மடங்கும் துத்தநாகத்தைவிட 3 மடங்கும் டைட்டானியத்தைவிட 35 மடங்கும் அதிகமாகும்.
உயரளவு வெப்பம் மற்றும் மின்கடத்தும் திறன் உடையதால் மின்கம்பிகளையும் மின்வடங்களையும் தயாரிக்க செம்பு உதவுகிறது.
இங்கிலாந்து நாட்டு வேதியியல் அறிஞரான சர்.ஹம்ரி டேவி செம்பு அசிடேட் என்ற சேர்மத்தைப் பிரகாசமான பச்சை நிறத்திற்கு வர்ணமாகப் பயன்படுத்தியுள்ளார்.
வோல்டாமானி (Voltameter) என்ற மின்னாற் பகுப்பு மின்கலன்களை உருவாக்க செம்பு முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது.
செம்புச் சத்து குறைவாக உள்ள தாவரங்களில் பச்சையம் குறைந்து இலைகள் இளம் நிலையிலேயே மஞ்சள் நிறமாகி வளர்ச்சி தடைப்படுகின்றது.
செம்பிலிருந்து கிடைக்கும் உலோகக் கலவைகளுள் பித்தளை, வெண்கலம், பீரங்கி உலோகம், ஜெர்மன் வெள்ளி, பாஸ்வர வெண்கலம் போன்றன முக்கியமானவை ஆகும்.
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது.
செம்பு தனித்த வடிவில் அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்திலும், ரஷ்யாவின் சில இடங்களிலும், ஆஸ்திரேலியாவின் தென்பகுதிகளிலும் பொலிவியா நாட்டிலும் கிடைக்கின்றது.