சேவலும் நகையும்
ஒரு சேவல், உண்பதற்கு ஏதும் ருசியான பொருள் கிடைக்குமா என்று தரையைக் கிளறிக் கொண்டு இருந்தது. அப்பொழுது, அது தற்செயலாக ஒரு கல்லைப் புரட்டியது. அதன் கீழே ஒரு பளபளக்கும் மாணிக்கத்தைக் கண்டது.
ஆரம்பத்தில் அமர்க்களமாகக் குதித்த சேவல், சில வினாடிகள் கழித்து, அது அழகாக இருக்கிறது. சிலருக்கு அது மதிப்புள்ளதாகக்கூட இருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு தானியமணி கிடைத்திருந்தால் போதுமே!
நீதி: மாணிக்கங்களால் பசியைத் தீர்க்க முடியாது.
கதைக்கான ஓவியம் வரைந்தவர் : பிஞ்சு வாசகர் சந்தனா