உலகின் பெரிய புத்தர் சிலை
உலகில் அதிகமாக சிலைகள் வைக்கப்பட்ட மனிதர் புத்தர்தான். விதவிதமாக பல நிலைகளில் புத்தர் சிலைகள் சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல ஒரு சிலை சீனாவில் இருக்கிறது.அச்சிலைதான் உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையாகும். 233 அடி உயரமும் 92 அடி அகலமும் கொண்டது இந்த புத்தர் சிலை. கி.மு. 618 907களில் சீனாவில் இருந்த தாங்க் வம்ச காலத்தில் மின்சியாங் ஆற்றங்கரையில் இந்த புத்தர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் லெஸ்சான் நகரில் உள்ள இச்சிலை, உலக சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. The Leshan Giant Buddha என்று அழைக்கப்படும் இச்சிலையை உலகின் பாரம்பரியச் சின்னமாக 1996 ஆம் ஆண்டு `யுனெஸ்கோ அறிவித்தது.
புத்தர் மாமலை போன்றவர்; அதனால்தான் இந்த புத்தர் மாமலை போல உருவாக்கப்பட்டுள்ளார் என்று சீன மக்கள் புத்தரைப் போற்றுகின்றனர்.