போலி நம்பிக்கை
பேத்தி: ஜாதி என்பது ஒரு மனிதன் பிறக்கும்போதே அவனோடு சேர்ந்து பிறக்கிறதா?
பாட்டி: இல்லை!
பேத்தி: ஜாதி என்பது உயிருள்ள ஒன்றா?
பாட்டி: இல்லை!
பேத்தி: ஜாதியை யாராவது பார்க்க முடியுமா?
பாட்டி: யாரும் பார்த்ததில்லை!
பேத்தி: ஜாதி என்ற ஒரு உணர்வு உள்ளத்தில் இருக்கிறதா?
பாட்டி: இருக்கிறது!
பேத்தி: மக்களில் பலர் ஜாதியை நம்புகிறார்களா?
பாட்டி: நம்புகிறார்கள்!
பேத்தி: ஜாதி இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறதா?
பாட்டி: ஆம், வாழ்ந்து கொண்டிருக்கிறது!
பேத்தி: ஜாதி என்பதை உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது?
பாட்டி: அம்மா, அப்பா, உறவினர்கள், நண்பர்கள்!
பேத்தி: அவர்கள் சொல்லித்தராவிட்டால், ஜாதி என்ற ஒன்று தானாக இருக்குமா?
பாட்டி: இருக்காது!
பேத்தி: ஜாதியைப் போலத்தான் கடவுளும்! இல்லாத ஒன்று தொடர்ந்து சொல்லிக் கொடுக்கப்படுவதால் பலரது உள்ளத்தில் இருந்துகொண்டு இருக்கிறது உண்மையில் இல்லாமலேயே! ஜாதி என்ற உணர்வும், கடவுள் என்ற உணர்வும் தானாக உணரும் ஒன்றல்ல, கற்பிக்கப்பட்ட ஒன்று! ஒன்று தொடர்ந்து நம்பப்படுவதால் இருக்கிறது என்று அர்த்தம் அல்ல! இரண்டுமே மூடநம்பிக்கைகள்! பாட்டி இத்தனை ஆண்டுகளாக ஒரு போலி நம்பிக்கையில் இருந்துவிட்டோமே…. என்ற உணர்வோடு தெளிவு பெற்று பேத்தியைத் தொடர்ந்தாள்.
– திராவிடப் புரட்சி
//