குரோமியம்
- குரோமியத்தின் குறியீடு Cr. இதன் முக்கியமான கனிமம் குரோமைட் ஆகும். இது அக்காலத்தில் செவ்வீயத்தாது என அழைக்கப்பட்டது.
- குரோமியத்தின் ஒரு கனிமமான குரோகோய்ட் என்ற பொருளை முதன்முதலில் லெஹ்மான் (Lehmann) என்ற வேதியியலார் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைக் கொண்டு ஆராய்ந்து அது குரோமியமாக இருக்கலாம் என தவறுதலாக முடிவு செய்தார்.
- பல்லாஸ் (P.S. Pallas) என்ற கனிமவியல் வல்லுநர் இந்த ஈயத்தாது வெவ்வேறு நிறங்களில் கிடைக்கக் கூடியதாக இருப்பதையும் அது கிட்டத்தட்ட சின்னபார் என்ற கனிமத்தைப் போல இருக்கிறது என்பதையும் கண்டறிந்தார்.
- குரோகோய்ட் கனிமத்தில் பிற உலோகங்களிலிருந்து மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஒரு புதிய தனிமம் இருக்க வேண்டும் என்பதை வாக்குலின் உறுதி செய்தார்.
- வாக்குலின், நிறம் என்று பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான குரோமா என்பதிலிருந்து குரோமியம் என்று பெயரிட்டார்.
- குரோமைட்டை சோடியம் குரோமேட்டுடன் வெப்பப்படுத்தி மின்னாற்பகுப்பு மூலம் குரோமியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கலாம்.
- குரோமைட்டைக் கரித்தூளுடன் சேர்த்து மின் உலை மூலம் வெப்பப்படுத்த பெரோகுரோம் என்ற பொருள் கிடைக்கிறது.
- பெரோகுரோம் எஃகு கலப்பு உலோகங்களைச் செய்யப் பயன்படுகிறது.
- நல்ல வெப்பங்கடத்தி, மின் கடத்தி, உலோகப் பொலிவு என்று ஓர் உலோகம் பெற்றிருக்கும் பொதுப் பண்புகள் அனைத்தையும் குரோமியம் பெற்றுள்ளது.
- எஃகுடன் சிறிதளவு குரோமியத்தைச் சேர்க்கும்போது கலப்பு உலோகத்தின் கடினத்தன்மை பலமடங்கு அதிகமாகும்.
- குரோமிய எஃகுடன் சிறிதளவு கரித்தூளைச் சேர்த்தால் சுழல் வட்டுகளுக்குத் (ball bearing) தேவைப்படும் மூலக்கூறு கிடைக்கிறது.
- ஒரு சிமிழியில் இரும்பு மற்றும் குரோமிய ஆக்சைடுகளை கரிமூலம் ஆக்சிஜ நீக்கம் செய்து பெரோ குரோமியம் தயாரிக்கலாம்.
- 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் புன்சன் என்பவர், தெவிட்டிய குரோமியம் குளோரைடு கரைசலில் கார்பன் தண்டை நேர்மின் முனையாகவும், பிளாட்டினத் தகட்டை எதிர்மின் முனையாகவும் கொண்டு குரோமிய முலாம் பூச்சைச் செய்து காட்டினர். குரோமியம் தோல் பதனிடும் தொழிலில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் 90 சதவிகித குரோமியப் படிவுகள் குரோமைட்டுகளாக ஒடிசா மாநிலத்தில் கிடைக்கின்றன.
//
//