அய்ந்திலேயே வளைக்கிறார்கள்!
5இல் வளையாதது 50இல் வளையாது என்று நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு. சிறு வயதிலேயே நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டால் பெரியவர்களாகும் போதும் அது துணை செய்யும் என்பதற்காகச் சொல்லப்பட்டது.
ஆனால், சீனாவில் 5இல் வளைக்கிறார்கள். பிஞ்சு மனங்களை மட்டுமல்ல, உடல்களையும்தான். ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சீனர்கள்தான் அதிகப் பதக்கங்களைத் தொடர்ந்து வெல்கிறார்கள். அதற்கு இந்த 5இல் வளைக்கும் முயற்சியும் ஒரு காரணமாம்.
தற்காப்புக் கலையில் உலகிலேயே முன்னிலை வகிப்பது சீனாதான். அவர்களின் பண்பாட்டிலேயே அது உண்டு.கராத்தே, குங்பூ போன்ற உடற்பயிற்சிக் கலையை சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்துவிடுகிறார்கள்.இதனால், அவர்களுக்கு நோய்கள் அதிகம் வருவதில்லை.
ஜிம்னாஸ்டிக் என்னும் உடல் வளைக்கும் விளையாட்டிலும் அவர்கள்தான் உலகில் முதலிடத்தில் உள்ளனர். இதற்காகத்தான் இந்தப் பிஞ்சு வயதிலேயே இப்படிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறுவயதிலேயே இப்படிப் பயிற்சி அளிப்பது நல்லதுதான் என்று சீனர்கள் சொன்னாலும், பிஞ்சுகளை இப்படியா கொடுமைப்படுத்துவது என்ற குரலும் பல நாடுகளில் ஒலிக்கிறது.