உலக நாடுகள்
பூடான் (Kingdom of Bhutan)
தலைநகர்: திம்பு
பரப்பளவு: 14,824 சதுர மைல்
அலுவலக மொழி: டசோங்கா (Dzongkha)
முக்கிய நகரங்கள்: திம்பு, புனதா பரோ
மக்கள்தொகை: 742,737 (2012)
நாணயம்: நகுல்ட்ரம் (இந்திய ரூபாயும் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது)
அரசர்: ஜிக்மி ஹேசர் நம்ஜ்யெல் (Jigme Khesar Namgyel)
பிரதமர்: ஷெரிங் டோப்கே (Tshering Tobgay)
அமைவிடம்: மத்திய ஆசியாவில் கிழக்கு இமயமலைப் பகுதியில் நான்கு பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சிறு நாடாகக் காட்சியளிக்கும் இந்நாடு இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. சுதந்திர நாடாக இருந்தபோதிலும், இதன் பாதுகாப்பு இந்திய அரசின் கீழ் உள்ளது.
கனிமவளம்: வெள்ளி, இரும்பு, சுண்ணாம்புக்கல், ஜிப்சம், விவசாயம்: கோதுமை, நெல், பார்லி, உருளைக்கிழங்கு, பழங்கள் விளைகின்றன.
தொழில்: பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கைவினைப் பொருள்கள், மரச்சாமான்கள் நவீன முறையில் குடிசைத் தொழில்களாக நடைபெறுகின்றன.
சிறப்புச் செய்திகள்: 1949இல் இந்தியா – பூடான் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம், பூடான் தனது வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவின் ஆலோசனையைப் பெறும் என்றும், ஆனால் பூடானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது. அரச பதவி பரம்பரை வழிப்பட்டது. 1907 முதல் வாங்சுக் பரம்பரையினர் ஆண்டு வருகின்றனர். பூடான் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.
//