விலங்குகளும் விசித்திர உறக்கமும்!
மனிதன், தண்டுவடம் தரையில் படும்படி (அல்லது மெத்தையில் படும்படி) வைத்து மல்லாந்த நிலையில் தூங்குகிறான். சிலர் குப்புறக் கவிழ்ந்தும், சிலர் ஒரு பக்கம் சாய்ந்தும் உறங்குவார்கள்.
நம்மைப்போலவே பிராணிகள் ஒவ்வொன்றும் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. நாய், பூனை, மாடுகள் தூங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், நாம் கண்டு ரசிக்க முடியாத வினோதம் கொண்ட பிராணிகள் பல உள்ளன. அவைபற்றி இங்கே…
பாம்பு இனங்கள் உடலை வளையம்போல சுருட்டி அதன் மீது தலைவைத்துப் படுத்திருக்கும், ஆனால், உறங்கும் போதும் பாம்புகளின் கண்கள் திறந்தே இருக்கும்.
மான்கள் நின்று கொண்டும், படுத்த நிலையிலும் உறங்கும். சில வகை மான்கள், தூங்கும்போது சுவாசத்தின் மூலமே எதிரிகள் நெருங்குவதை அறிந்து கொள்ளும்.
வாத்து தரையில் நின்று கொண்டும், நீரில் நீந்திக் கொண்டும் உறங்கும் ஆற்றல் பெற்றது.
யானைகளும் குதிரைகளும் நின்று கொண்டேதான் உறங்கும்.
இவை எல்லாவற்றையும்விட விசித்திர தூங்கும் பழக்கம் கொண்டன எறும்புகள். மண்ணில் அழகான மணல் மெத்தைகளை உருவாக்கி, மல்லாந்த நிலையில் உடலோடு கால்களை ஒட்டி வைத்து ஒய்யாரமாய் உறங்கும். சுறுசுறுப்பான எறும்புகள் சுமார் 3 மணி நேரம் ஓய்வெடுக்கும்.
– தகவல்: இ.ப.இனநலம், 9ஆம் வகுப்பு, பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்