உலக நாடுகள் போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா (Republic of Bosnia and Herzegovina)
தலைநகர்: போஸ்னியா: சராஜிவோ ஹெர்சிகோவினா: மஸ்டர்
பரப்பளவு: 19,741 சதுர மைல்கள்
மொழி: செர்போ – குரோஷியன்
முக்கிய நகரங்கள்: சராஜிவோ, பன்ஜா லுகா, மஸ்டர்
நாணயம்: புதிய யூகோஸ்லாவியா தினார்
குடியரசுத் தலைவர்: ஜெல்ஜ்கோ கோம்சிக் (ZELJKO KOMSIC)
பிரதமர்: விஜகோஸ்லன் பெவென்டா (VJEKOSLAN BEVANDA)
அமைவிடம்: தென்கிழக்கு அய்ரோப்பிய நாடு ஆகும். மேற்கு மற்றும் வடக்கே குரோஷியாவும் கிழக்கே யூகோஸ்லாவியாவும் அமைந்துள்ளன.
விவசாயம்: கோதுமை, உருளைக்கிழங்கு, பிளம்ஸ் பழம், சோளம்.
தொழில்: கால்நடை வளர்த்தல், சிமெண்ட், மின்சாரம், மோட்டார் வாகனங்கள், சர்க்கரை, தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாரித்தல்.
சிறப்புச் செய்தி: கி.பி. 7ஆம் நூற்றாண்டில் அடிமைகளின் குடியேற்ற நாடாக இருந்த இந்நாட்டை 1863இல் துருக்கியர் கைப்பற்றினர். 1878இல் போஸ்னியப் பகுதி ஹங்கேரி அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1908இல் ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் இணைக்கப்பட்டதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டு உலகம் முழுவதும் பதற்ற நிலையை உருவாக்கிய முதல் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது.