தங்கம்(Gold – Au)
தங்கம் அல்லது பொன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
தங்கத்தின் குறியீடு Au. தண்ணீரைப் போல சுமார் 19 மடங்கு எடை கொண்டது.
மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்.
ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் 3 பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.
தங்கத்தின் மதிப்பு காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தமான தங்கமாகும்.
24 காரட் தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 முதல் 9 காரட் வரை மதிப்புள்ள தங்கம் தங்க நகைகள் செய்ய பயன்படுகிறது.
22 காரட் தங்கத்தில் 91.6 சதவிகித தங்கமும் 8.4 சதவிகிதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகங்களும் கலந்திருக்கும்.
பூமிக்கு அடியில் பாறைகளில் படர்ந்திருக்கும் தங்கம் வெடி வைத்துத் தகர்த்து ரசாயன முறையில் பிரித்தெடுக்கப்பட்டு, மின் பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவு தென் ஆப்ரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது.
கனடா, அமெரிக்க அய்க்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும் கிடைக்கிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் என்னும் இடத்தில் கிடைத்தது.
ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கியில் (ரிசர்வ் வங்கி) தங்கத்தை இருப்பு வைத்திருக்கும். தங்கத்தின் இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.
நகைகள், காசுகள், பாத்திரங்கள், பேனா முள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியன தங்கத்தால் செய்யப்படுகின்றன.
தங்க பஸ்பம் சாப்பிட்டால் மேனி பளபளப்பாக பொலிவுபெறும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.