காலையில் கரை; மாலையில் கடல்!
பெர்ரன்போர்த், கார்ன்வால்
வெல்ஸ் கடற்கரையை ஒட்டிய கடற்கரை, நார்ஃபோக்
பெர்ரன்போர்த், கார்ன்வால்
ஃப்லாம்போரவ், யார்க்சையர்
பெட்ருதன் ஸ்டெப்ஸ், கார்ன்வால்
செயின்ட் மேரிஸ் கலங்கரைவிளக்கம், நார்த்தும்பர்லேண்ட்
பிரிட்டீஷ் கடற்கரையின் தாழ் அலை (Low Tide). உயர்மட்ட அலை (High Tide)களை வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்து ஆவணமாக்கி அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மிக்கேல் மார்டின். அன்றாடம் ஏற்படும் பருவ மாற்றங்களை 8 ஆண்டுகளாகக் கண்காணித்து ஆய்வு செய்து இப்பணியைச் செய்துள்ளார்.
இந்தப் படங்கள் எல்லாம் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டவை அல்ல. ஒரே இடத்தில் 8 முதல் 16 மணி நேர வித்தியாசத்தில் எடுக்கப்பட்டவை.
மிக்கேல் மார்டின்
உலகம் இதனை இயற்கையின் அழகாகப் பார்க்கிறது. குஜராத்தில் இப்படி ஏற்படும் உயர் அலை, தாழ்வலைகளில் கோவில் ஒன்று மூழ்கி மீண்டும் தெரிவதை ஆண்டவன் சக்தி என்று அதிசயிக்கிறார்கள் இந்திய நாட்டில்!
என்னத்தச் சொல்ல…! விடுங்க… நாம் இயற்கையை ரசிப்போம்!