காட்டில் வழிகாட்டும் சிம்பன்சி
குரங்கு, மனிதக் குரங்கு, சிம்பன்சி என்றாலே நமக்குள் ஒருவித ஆர்வமும் பரபரப்பும் ஏற்படும். இதில், சிம்பன்சி மிகுந்த புத்திசாலி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சிம்பன்சிகள் அடர்ந்த காட்டினுள் சென்று விட்டு வழி தெரியாமல் திணறுபவர்களுக்கு வழியினைக் காட்டி உதவுவதுடன் உணவு இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துக் கொடுக்கும் அறிவாற்றலைப் பெற்றுள்ளதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காட்டில் உணவினை மறைத்து வைத்துவிட்டு ஒரு மனிதரை அனுப்பி கண்டுபிடிக்கும்படிக் கூறினர். கண்டுபிடிக்க முடியாத அந்த மனிதர் சிம்பன்சியிடம் சைகை மூலம் கேட்டவுடன், உடனே உணவு இருந்த இடத்தினைக் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஸ்டெர்லிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாரா ஜான் விக், இதற்கு முந்தைய ஆய்வுகள் சிம்பன்சிகளின் சைகை மொழியில் நெகிழ்வுத் தன்மை இருப்பதைச் சுட்டிக் காட்டின. தற்போது, மிகவும் சிக்கலான சூழலில் அவற்றின் அறிவுத் திறனை வெளிப்படுத்த முடியும் என்பது தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.