குளிர்பான ஆபத்து
பிஞ்சுகளே,
வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க இன்று பெரும்பாலானோர் புட்டிகளில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களையே பெரிதும் விரும்பி அருந்துகின்றனர். இந்தக் குளிர் பானங்களில் கார்போஹைட்ரேட்களும் சர்க்கரையும் கலக்கப்பட்டுள்ளது. 250 மி.கிராம் குளிர்பானம் குடித்தால் 105 கலோரி சக்தியும் 26.5 கிராம் சர்க்கரைச் சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கிறது.
பழச்சாறு குடித்தால் 110 கலோரி சக்தியும் 26 கிராம் சக்கரைச் சத்தும் கிடைக்கிறது. மேலும், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் பருமனும் இருதய நோய்களும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கலாஸ்கோவ் பல்கலைக்கழக இருதய நோய் மற்றும் மருத்துவ அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே, உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களைத் தவிர்த்துவிட்டு, இளநீர்,பதநீர்,பழங்கள், பழச்சாறுகளைச் சாப்பிட்டு கோடையில் உடல்நலனைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.