சீனா விசன் 2050
கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்ற சீனா குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகக் கொண்டு வந்துள்ள திட்டமே சீனா விசன் 2050 என்ற தொலைநோக்குத் திட்டம்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2010ஆம் ஆண்டிலிருந்து பிறந்த குழந்தைகளை ஆரோக்கியத்தில், கல்வியில் சிறந்தவர்களாக வளர்க்க நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்று, குழந்தைகள் சரியான தூரத்தில் வைத்துப் படிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கருவி. இந்தக் கருவியின் உதவியுடன் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாதாம்.
இப்படிப் படிக்கும் குழந்தைகள் 20 வயதினை அடையும்போது கண்பார்வைக் குறைபாடு இல்லாத இளைய சமுதாயத்தைச் சீனா பெற்றிருக்கும். வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து, இதுபோன்ற பல திட்டங்களைச் சீனா செயல்படுத்த உள்ளது.