உலக நாடுகள்
பிரிட்டானிய கன்னித் தீவுகள் (British Virgin Islands)
தலைநகர்: ரோட் டவுன்
பரப்பளவு: 59 சதுர மைல்கள்
அலுவலக மொழி: ஆங்கிலம்
மக்கள் தொகை: 27,800
நாணயம்: அமெரிக்க டாலர்
அரச தலைவர்: இரண்டாம் எலிசபெத்
ஆளுநர்: வில்லியம் பாய்ட் மிக்லெரி (William boyd McCleary)
பிரதமர்: ஓரியாண்டோ ஸ்மித் (Oriando Smith)
அமைவிடம்: சுமார் 60 வெப்பமண்டல கரீபியன் தீவுகள் பிரிட்டானிய வெர்ஜின் தீவுகளைச் சுற்றி அமைந்துள்ளன. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்கள் இணையும் பகுதியில்தான் இத்தீவுக்கண்டம் உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால் மேற்கில் அமெரிக்க வெர்ஜின் தீவுகளும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் கரீபியன் கடலும், கிழக்கில் கரீபியன் கடற்பரப்பில் அமைந்துள்ள போட்ட ரிக்கோ என்ற அமெரிக்கத் தீவுகளும் அமைந்துள்ளன.
விவசாயம்: சிறிய அளவில் விவசாயம் நடைபெறுகிறது.
சுற்றுலாத் தலம்: வெள்ளை மணல் கடற்கரைகளும், முருகை பாறைகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பனவாகும். சுற்றுலாத் துறை மண்டலம் 45 சதவிகித வருமானத்தை ஈட்டித் தருகிறது.
சிறப்புச் செய்தி: கிறிஸ்டோபர் கொலம்பஸ் வெர்ஜின் தீவுகளைக் கண்டுபிடித்த முதல் அய்ரோப்பியர் என்ற பெருமையைப் பெறுகிறார். 1493ஆம் ஆண்டு அமெரிக்காவை நோக்கிச் சென்ற தனது இரண்டாவது கடற்பயணத்தின்போது இத்தீவினை அடைந்துள்ளார். கொலம்பஸ் Santa Ursulaylas once mil virgenes என்று பெயர் வைத்துள்ளார். பிரிட்டானிய வெர்ஜின் தீவுகளின் பாரம்பரிய இசைவடிவம் பங்கி என்று அழைக்கப்படுகிறது. பங்கி இசை பள்ளிக் கல்வியிலும் இடம் பெற்றுள்ளது.