புத்தக இருக்கைகள்

புத்தகம் படிக்க அமர்ந்திருப்போம். புத்தகங்களின் மீது அமர்ந்திருப்போமா?
புத்தக வாசிப்பை விரிவாக்க மட்டுமல்லாமல், படைப்பாக்கத்துடன் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தக இருக்கைகள் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் சாலையோர அமர்விடங்களில் அமைந்துள்ளன.
துருக்கி மொழியில் உள்ள 18 பிரபல இலக்கியவாதிகளின் நூல்களை நினைவுகூறும் வகையில் இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நூலின் முக்கியப் பக்கங்களைப் படிக்கும் வகையில் அமரும் இடத்தில் பைபர் இழைகளால் பதிக்கப்பட்டு ஒட்டிவைக்கப்பட்டுள்ளன. நகர நிர்வாகமும் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தப் புத்தக வடிவ இருக்கைகளை அமைக்கும் திட்டத்தை நடத்தி வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள், பேருந்து நிலையத்தில பேருந்துக்காகக் காத்திருப்பவர்கள் என அனைவரையும் கவர்ந்திழுக்கும் புத்தக இருக்கைகள் மக்களிடையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளன.