உலக நாடுகள் – புருனே (State of Brunei Darussalam)
தலைநகரம் : பந்தர் செரி பெகவான்
பரப்பளவு : 5,765 சதுர கிலோ மீட்டர்
அலுவலக மொழி : மலாய், ஆங்கிலம்
மக்கள் தொகை : 4,15,717
நாணயம்: புருனே டாலர்
அரசு : இஸ்லாமிய சுல்தானிய முடியாட்சி
இளவரசர்: அல்-முக்டடீ பில்லா(Al-Muhtadee Billah)
சுல்தான்: ஹஸ்ஸனல் போல்கியா (Hassanal Bolkiah)
விவசாயம் : நெல், பழங்கள், மிளகு, ரப்பர் முக்கிய விளைபொருள்கள்.
அமைவிடம்: தென்கிழக்கு ஆசியாவில் தென்சீனக் கடல்பகுதியை ஒட்டியும் மலேசியாவின் எல்லையை ஒட்டியும் அமைந்துள்ள நாடு ஆகும்.
தொழில்: கச்சா பெட்ரோலியம், திரவநிலை இயற்கை வாயு, இயற்கை எரிவாயு, பெட்ரோலியம்
ஏற்றுமதி, இறக்குமதி: கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ரப்பர் ஆகியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள், உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சிறப்புச் செய்தி: இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் உலகின் ஒன்பதாவது இடத்தில் அமைந்துள்ளது. எண்ணெய் வளத்திலும் தனிநபர் வருமான அடிப்படையிலும் செல்வவளம் மிக்க நாடாகத் திகழ்கிறது. 2014ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் சட்டப்பூர்வமாக இஸ்லாமிய நாடு என்று சுல்தானால் அறிவிக்கப்பட்டது.