நீச்சல்
எந்தவிதமான கருவிகளும் இல்லாமல் கை, கால் மற்றும் உறுப்புகளின் அசைவின் மூலம் நீரில் மிதந்து நகர்ந்து செல்வதே நீச்சல் எனப்படுகிறது. சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும் ஆற்றல் நீச்சலுக்கு உள்ளது. குளிக்க, மீன் பிடிக்க, உடற்பயிற்சி, புத்துணர்ச்சி மற்றும் விளையாட்டு என பல நிலைகளில் நீச்சல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கற்காலம் முதல் நீச்சல்கலை மனிதர்களிடம் இருந்துள்ளது என்பதை 7000 ஆண்டுகள் பழைமையான குகை ஓவியங்கள் மூலம் அறிய முடிகிறது. எழுத்து வழியிலான ஆதாரங்கள் கி.மு.2000லிருந்து (கில்கமெஷ் காப்பியம், இலியட், ஒடிசி, விவிலியம்) கிடைக்கின்றன. 1538ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் வேமன் என்பவர் முதல் நீச்சல் புத்தகத்தினை வெளியிட்டுள்ளார். 1800ஆம் ஆண்டில் அய்ரோப்பாவில் நீச்சல் கலை விளையாட்டாகப் பயன்படத் தொடங்கியது.
ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல்
1896ஆம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற முதலாம் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டி சேர்க்கப்பட்டது. 1908ஆம் ஆண்டு பன்னாட்டு நீச்சல் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.(The Federation International de Natation) (FINA).
பேக் ஸ்ட்ரோக் நீச்சல்
ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல், பட்டர் ஃப்ளை நீச்சல், பேக் ஸ்ட்ரோக் நீச்சல், ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் என்ற வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஃப்ரீ ஸ்டைல் நீச்சல்
இரு கைகளையும் முன்னோக்கித் தள்ளி நீரை இழுத்துப் பின்னோக்கித் தள்ளும் நேரத்தில் மார்பினால் வேகமாக உந்தித் தள்ளி நீந்துவதே ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் ஆகும்.
பட்டர் ஃப்ளை நீச்சல்
இரு கைகளையும் முன்னோக்கி வைத்து நீரைப் பின்னோக்கி இழுத்து நீந்துவதே வண்ணத்துப் பூச்சி நீச்சல் ஆகும்.
தொடங்கும் கோட்டினைப் பார்த்தபடி முகத்தினை வைத்துக் கொண்டு கால்கள் நீர் மட்டத்திற்குள் இருக்கும்படி பின்பக்கமாக நீந்துவதே பேக் ஸ்ட்ரோக் எனப்படுகிறது.
இந்த மூன்று வகைகளை விடுத்து, போட்டியாளர் தனது விருப்பத்திற்கேற்ப நீந்துவதே ஃப்ரீ ஸ்டைல் முறையாகும். இதில், உடலின் எந்தப் பகுதியாலும் திரும்பலாம்; தொட வேண்டிய பகுதியைத் தொடலாம். கையினால் மட்டுமே தொடவேண்டும் என்பது கிடையாது.