கிம்பெர்லே வைரச் சுரங்கம் (Kimberley Diamond Mine)
தென் ஆப்ரிக்க நாட்டில் நார்தன் கேப் மாநிலத்தில் கிம்பெர்லே என்னுமிடத்தில் அமைந்துள்ள வைரச் சுரங்கம்தான் உலகிலேயே மிகப் பெரிய வைரச் சுரங்கமாகும். 1871 ஜூலை மாதம் தொடங்கி 1914ஆம் ஆண்டு வரை 50,000 தொழிலாளர்கள் கோடாரி மற்றும் மண்வெட்டியைப் பயன்படுத்தி 2,720 கிலோ கிராம் வைரத்தினை வெட்டி எடுத்துள்ளனர்.
இந்தப் பள்ளமானது 42 ஏக்கர் மேற்பரப்பில் 463 மீட்டர் (1,519 அடி) அகலத்துடனும், 240 மீட்டர் (790 அடி) ஆழத்துடனும் காணப்படுகிறது.
பள்ளத்தின் ஒரு பகுதியில் குப்பைகளைக் கொட்டியதால் சுமார் 215 மீட்டர் வரை (705 அடி) தற்போது பள்ளத்தின் ஆழம் குறைந்துள்ளது. மேலும், 40 மீட்டர் (130 அடி) அளவிற்குத் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளது.
டீ பீர்ஸ் (De beers) சகோதரர்களுக்குச் சொந்தமான பண்ணையில் கோல்ஸ்பெர்க் (Colesberg) என்னுமிடத்தில் Red Cap Party என்ற அமைப்பின் உறுப்பினர்களால் முதன்முதலாக இங்கு வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.