கடவுள்ட்ட லேப்டாப் இருக்கா?
தாத்தா! ஒரு டவுட்டு
என்னடா! சொல்லு
கடவுள்ட்ட லேப்டாப் இருக்குதா?
போடா! கடவுளே இல்லை _ அதுவே சும்மா ரீலு
தாத்தா! உங்களுக்கு சாமி இல்லை. ஆச்சிக்கு இருக்கு. அப்பாவுக்கு இருக்கு. அத்தைக்கு இருக்கு. அம்மாவுக்கு இல்லை. மாமாவுக்கு இல்லை.
உனக்கு இருக்காடா சொல்லு.
தெரியலையே தாத்தா! கடவுள்ட்ட லேப்டாப் இருக்குதா அத மொதச் சொல்லுங்க.
டேய்! எனக்கே இப்பதான் லேப்டாப் தெரியும்! நாங்க படிக்கச்ச அதெல்லாம் கிடையாது. அப்படின்னா கடவுள்ட்ட எப்படி இருக்கும்?
தாத்தா! உலகத்திலே இருக்குற எல்லா விசயமும் அவருக்குத் தெரியும்கிறாங்கல்ல… லேப்டாப் இல்லாம எப்படி அவரு தெரிஞ்சுக்க முடியும்? கூகுள்ல போய்த்தானே எல்லாம் தேட முடியும்?
சகலத்தையும் ஞாபகம் வச்சிக்க முடியாது _ கஷ்டந்தான். கூகுள்ல தேடுறதும் சிரமம்தான்.
அப்ப… கடவுள் இல்லை தாத்தா, சும்மா நாமளே செஞ்சதுதான் சாமி…
எனக்குக்கூட கிளேய்ல பிள்ளையார் சாமி செய்யத் தெரியுமே! அதுக்கு உயிரெல்லாம் இருக்காது… சும்மா பொம்மைதானே தாத்தா…
ஆமான்டா… எஞ்செல்லம்….
ஆனா நமக்கு அம்மா அப்பாதானே கடவுளு…
பேரனைத் தாத்தா வாரியணைத்து உச்சி மோந்து முத்தம் கொடுத்தார்.
(சு.பொ.அகத்தியலிங்கம், அவரது பேரன் சஞ்சை ஹஷ்மி இருவருக்குமிடையே நடந்த உண்மை உரையாடல்)
(நன்றி: தீக்கதிர் – வண்ணக்கதிர் 29.6.2014)