உலக நாடுகள் புர்கினா ஃபாசோ (Burkina Faso)
தலைநகரம்: வாகடூகு (Ouagadougou)
ஆட்சிமொழி:பிரெஞ்சு
பரப்பளவு: 274,200 சதுர மைல்கள்
மக்கள்தொகை: 15,730,977
சுதந்திரம்: ஆகஸ்ட் 5, 19`60
குடியரசுத் தலைவர்: பிளைஸ் கம்பயர்(Blaise Compaore)
பிரதமர்: லுக்_அடால்பி டியோ (Luc-Adolphe Tiao)
நாணயம்: ஃபிரான்க் (Frank)
அமைவிடம்: புர்கினா ஃபாசோ மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும். வடக்கில் மாலி, கிழக்கில் நைஜர், தென்கிழக்கில் பெனின், தெற்கில் டோகோ மற்றும் கானா, தென்மேற்கில் கோட் லவோர் (Cote d’lvoire) ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
சிறப்புச் செய்தி: அப்பர் வோல்டா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த நாடு, அதிபர் தாமஸ் சங்கரா என்பவரால் 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் நாள் புர்கினா ஃபாசோ என பெயர் மாற்றம் பெற்றது. மோரி, டியோலா மொழிகளில் புர்கினா ஃபாசா என்பதற்கு உயர் மக்களின் நாடு என்பது பொருளாகும்.
கானா மற்றும் Cote d’lvoire போன்ற அண்டை நாடுகளுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். மேற்குலக நாடுகள் மின்னணுக் கழிவுகளை இங்குதான் கொட்டுகின்றன.