அண்ணாவின் ஆங்கிலப் புலமை
அறிஞர் அண்ணா, தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் நல்ல புலமை உடையவர் என வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதின. இந்தச் செய்தியினை அறிந்த அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் என்ற பத்திரிகையின் நிருபர், என்னதான் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அண்ணாவினால் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என நினைத்துள்ளார்.
அப்போது, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்ட மத்திய அரசின் கூட்டம் ஒன்று டில்லியில் நடைபெற்றுள்ளது. டில்லி விமான நிலையத்திலேயே அண்ணாவைச் சந்தித்து பேட்டி காண்பதுடன் அவரது ஆங்கிலப் புலமையையும் சோதித்துப் பார்த்துவிட நினைத்தார் நிருபர்.
விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்த அண்ணாவைப் பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். கேள்விகளைக் கேளுங்கள் என அண்ணா கூறியதும், “Do you know uno ?’ என நிருபர் கேட்டுள்ளார். உடனே, “i know uno. You know uno. i know you know uno. but I know uno better than you know uno” என பதில் கூறியுள்ளார் அண்ணா. கேள்வி கேட்ட நிருபர் தடுமாற்றத்துடன், சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றதும்,
“I know UNO (United Nation Organisation). You know UNO. I know you know UNO. But I know UNO better than you know UNO” என விளக்கம் கூறியுள்ளார் அண்ணா.