குரங்குகள் பலவிதம்!
டவ்ரகாலி
டவ்ரகாலி எனப்படும் ஆந்தை முகக் குரங்குகள் ஆந்தையைப் போல இரவில் மட்டுமே தெரியும்.
ஆங்வான்டிபோ
ஆங்வான்டிபோ வகைக் குரங்குகள் வௌவாலைப் போல மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடியே உறங்கும்.
உகாரி
உகாரி என்ற குரங்கின் உடலிலிருந்து ஆரஞ்சுப் பழச்சாற்றின் மனம் எப்போதும் வருமாம்.
இன்டிரிஸ்
இன்டிரிஸ் வகைக் குரங்கு மனிதனைப் போலவே கத்துவதுடன் அதிகாலையில் சூரிய வணக்கம் செய்யும் இயல்புடையது.
லெமூர்
லெமூர் வகைக் குரங்கு மிகவும் ஒல்லியானவை.
வான்ட்ரூ
வான்ட்ரூ வகைக் குரங்குகள் புத்திக் கூர்மையானவை.
குரங்கு பேன் பார்க்குமா!
குட்டியின் தலையைத் தாய்க் குரங்கு கோதிக்கொண்டு இருக்கும். நாம் என்ன சொல்லுகிறோம்? பேன் பார்க்கிறது அதை எடுத்துத் தின்னுகிறது என்றுதானே நினைக்கிறோம். உண்மை அது அல்ல.
குரங்குகளுக்கு வியர்வை அதிகமாகச் சுரப்பதால் சின்னஞ்சிறு உப்புப் படிவுகள் ஏற்படுகின்றன. இந்த உப்புப் படிவங்களுக்காகத் தான் தலையைக் கோதுகின்றன. கிடைத்த அந்த உப்புத் துண்டுகளை வாயில் போட்டுக் கொள்கின்றன.