உலக நாடுகள் – பர்மா(Burma)
தலைநகர்: நெய்பிதௌ (Naypyidaw)
பெரிய நகரம்: யங்கூன் (Yangon)
பரப்பளவு: 678,500 சதுர கிலோ மீட்டர்
அலுவலக மொழி: பர்மியம்
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்: ஜிங்போ, கயா, கரேன், சின், மோன், ராகினே, ஷான்
மக்கள் தொகை: 61,120,000
நாணயம்: கியாட் (Kyat)
தெய்ன் செய்ன்
குடியரசுத் தலைவர்: தெய்ன் செய்ன் (Thein Sein)
சாய் மௌக் காம்
நயான் டன்
துணைக் குடியரசுத் தலைவர்கள்: சாய் மௌக் காம் (Sai Mauk Kham), நயான் டன் (Nyan Tun)
அமைவிடம்: தென்கிழக்கு ஆசிய நாடு ஆகும். வடமேற்கில் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவும் வடக்கு மற்றும் வடகிழக்கே திபெத்தும், தென்கிழக்கில் லாவோஸ் மற்றும் தாய்நாடும் தென்மேற்கில் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல், வடக்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
சிறப்புச் செய்தி: உலகின் 40ஆவது பெரிய நாடாகவும், தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. உலகின் மக்கள் தொகையில் 24ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பர்மா என்ற பெயரானது 1989ஆம் ஆண்டு மியான்மா (Union of Myanmar) என்று மாற்றப்பட்டது.
அப்போதைய தலைநகர் ரங்கூன், யங்கோன் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2006ஆம் ஆண்டு நய்பிதௌ மியான்மரின் தலைநகராக மாற்றம் பெற்றது. கீழை நாடுகளின் அரிசிக் கிண்ணம் எனப்படுகிறது. கனிமவளம் மிகுந்த நாடு. பன்றி இறைச்சியும், தேக்கு மர ஏற்றுமதியும் பெருமளவில் நடைபெறுகிறது.
உலகின் மிகப் பெரிய புத்தகம்
புத்த விகாரைகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் உள்ளதால், ‘Land of Pagodas’ என்றும் வழங்கப்படுகிறது.
ஸ்வேடகோன் பகோடா
யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட ஸ்வேடகோன் பகோடா மிகவும் புகழ் பெற்றதாகும்.
730 பளிங்குப் பலகைகளாலான உலகின் மிகப் பெரிய புத்தகம் மண்டலேயில் உள்ள குத்தோடௌ பகோடாவில் உள்ளது. தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்த நாடுகளுள் ஒன்று.
மக்கள் மத்தியில் ஆங் சாங் சூகி
இராணுவ ஆட்சி நடந்துவரும் பர்மாவில் ஜனநாயகத்திற்கான குரலை ஆங் சாங் சூகி தொடர்ந்து எழுப்பி வருகிறார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசினையும் அவர் பெற்றுள்ளார்!