தெரியுமா?
கரையான் ஆண்டிற்கு ஒரு கோடி முட்டையிடும்.
கரப்பான் பூச்சிகள் தோன்றி சுமார் 35 கோடி ஆண்டுகளாகின்றன. இதன் இரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் இல்லாததால் வெள்ளை நிறமாக இருக்கிறது.
நியூசிலாந்து நாட்டில் காணப்படும் ஜெய்ண்ட் வீடா (Giant Weta) என்ற பூச்சி மரத்திலிருக்கும்போது மரத்தின் நிறத்திற்கு மாறிவிடும். யாராவது இதனைப் பிடித்தால், கொடுக்கினால் கொட்டிவிடும். அந்த இடத்தில் வலி இருக்காது. ஆனால் தொற்றுநோய் ஏற்படும்.
தேனீக்களில் 20 ஆயிரம் வகைகள் உள்ளன. எல்லாக் கண்டங்களிலும் இவை பரவலாகக் காணப்பட்டாலும் அண்டார்டிகாவில் மட்டும் இல்லை. மிகப் பெரிய தேனீயான மெகாசிலி புளுட்டோ 39 மி.மீட்டர் நீளம் உடையது.
தும்பிப் பூச்சியால் மட்டுமே முன்னோக்கியும் பின்னோக்கியும் பறக்க முடியும்.
எறும்புகளில் மிகவும் பயங்கர மானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜாக் ஜம்பர் எறும்பாகும். இது கடித்தால் அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களுக்கு 15 நிமிடங்களுக்குள் இறப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பட்டாம்பூச்சிகளுக்கு நுரையீரல்கள் இல்லை. ஸ்பிராக்கிஸ் எனும் துளைகள் மூலமாகச் சுவாசிக்கின்றன.
ஜீரண உறுப்பே இல்லாத உயிரினம் ஈசல் ஆகும்.