காலியம் (Ga)
பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞரான லிகோக் டி பாய்ஸ் பௌட்ரன் (Lecoq de Boisbaudran) என்பவரால் 1875ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இயற்கையில் காலியமானது துத்தநாகம், ஜெர்மனியம் மற்றும் அலுமினியம் இவற்றுடன் சேர்ந்து காணப்படுகிறது.
பிரான்சு நாட்டிற்கு லத்தீன் மொழியில் காலியா என்று பெயர். பாய்ஸ் பெலிட்ரன் தன் நாட்டைக் கவுரவிக்கும் வகையில் காலியம் என்று பெயரிட்டார்.
தனிம அட்டவணையை நிறுவிய மெண்டலீவ், அலுமினியத்திற்கும் (அணு எண் 13) இண்டியத்திற்கும் (அணு எண் 49) இடையில் ஒரு தனிமம் இருக்க வேண்டும் என்றும், அதை ஏக அலுமினியம் (Eka Aluminium) என்று அழைக்கலாம் என்றும் கூறினார். இந்த ஏக அலுமினியமே பாய்ஸ் பௌட்ரனின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் காலியம் ஆனது.
சிங்பிளண்ட் தவிர காலைடியிலும் (Cu Ga S2) அலுமினியத்தின் கனிமமான பாக்சைட்டிலும் கேயோலின்னிலும (Kaolin) காலியம் கிடைக்கின்றது.
இன்றைய நிலையில் பெருமளவு காலியம் அலுமினியச் சுத்திகரிப்பு வழிமுறைகளிலிருந்தே கிடைக்கின்றது.
99.999 சதவிகிதம் தூய காலியம் இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள அணு எரிபொருள் கூட்டாலையில் (Nuclear Feul Complex) உற்பத்தி செய்யப்படுகின்றது.
வெள்ளி போன்று பளபளப்பான ஒரு வெண்ணிற உலோகமாகும்.
சாதாரண வெப்பநிலை மாற்றங்களினால் உருகவும் உறையவும் கூடும் என்பதால், சேமிக்கவும் எடுத்துச் செல்லவும் பாலி எத்திலினாலான கலன்களே பாதுகாப்பானது.