செயற்கை இலை
தாவர இலைகளைப் போலவே கார்பன்_டை_ஆக்சைடைக் கிரகித்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடும் செயற்கை இலையினை லண்டன் நகரில் உள்ள ராயல் ஓவியத்துறை கல்லூரி மாணவர் ஜூலியன் மெல்சிசோரி கண்டுபிடித்துள்ளார்.
பட்டு நார்களிலிருந்து எடுத்த புரதத்தையும் தாவர செல்களிலிருந்து எடுக்கப்பட்ட குளோராபிளாஸ்டுகளையும் கொண்டு செயற்கை இலையானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இலை நீரை உறிஞ்சும் தன்மையுடையது.
செயற்கை இலைக்கு ஆக்சிஜனை வெளியேற்ற மின் வெளிச்சமும் சிறிதளவு தண்ணீரும் இருந்தால் போதுமானது; திறந்த வெளியிடங்களிலும் பயன்படுத்த முடியும் என்று ஜூலியன் மெல்சிசோரி கூறியுள்ளார். உலகின் செயற்கையான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உயிரியல் சார்ந்த இலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அசத்தல் அகரன்
தூங்கிச் செயற்பால!
எல்லாம் நல்லாக்கீங்களா…? ஒரு திருக்குறள் பார்ப்போமா?
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
அப்படின்னா,
செய்ய வேண்டியத சரியான நேரத்துல செய்யணும்! சும்மா… நா எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது அப்டின்னு ஊர ஏமாத்தக் கூடாது!
சரியா!?!
போங்க, அல்லாம் ஹேப்பியாருங்க!!