தெரியுமா?
தென்அமெரிக்காவின் அமேசான் நதியில் காணப்படும் ஈல் (Eel) மீனின் உடலில் சுமார் 600 வாட் மின்சாரம் இயற்கையாக உற்பத்தியாகிறது. மனிதனையும் பிற உயிரினங்களையும் பாதிக்கும் இந்த மின்சாரம் இன்னொரு ஈல் மீனை ஒன்றும் செய்யாது.
தென் அமெரிக்காவின் கடலோரத்தில் காணப்படும் அனெப் லெப்ஸ் என்ற மீனுக்கு 4 கண்கள் இருக்கும். 2 கண்களால் நீர்மட்டத்திற்கு மேலேயும் இரண்டு கண்களால் நீர் மட்டத்திற்குக் கீழேயும் பார்க்குமாம்.
அமெரிக்கக் கடல்களில் காணப்படும் பிரானா என்ற மீன் 15 செ.மீ. நீளமே இருக்கும். ஆனால், மிகப் பெரிய கடல்வாழ் உயிரினங்களைத் தன் கூரிய பற்களால் குத்திக் கொன்றுவிடுமாம்.
பூமியில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும் பெரியது கடலில் வாழும் நீலத் திமிங்கலம். இது, 20 யானைகளின் எடை கொண்டது. இதன் குட்டி 3000 கிலோ எடை இருக்குமாம்.
உலகிலேயே சாலி(சேல்) மீன்கள்தான் அதிவேகமாகச் செல்பவை ஆகும்.
உலகிலேயே அதிக முட்டையிடும் மீன்கள் மோலா மோலா. ஒரே நேரத்தில் சுமார் 300 மில்லியன் முட்டைகள் இடுகின்றன.
உலகில் நீண்ட காலம் வாழும் உயிரினம் ஆமை ஆகும். இதற்குப் பற்களே கிடையாது. கடல் ஆமைகள் 100 முட்டைகள்வரை இடும்.
உலகின் மிகச் சிறிய மீனினம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள பீட்டோ சைபிரிஸ் ஆகும். இதன் நீளம் 7.9 மீட்டர்.
மனிதனுக்கு இணையான அறிவாற்றல் உடைய விலங்கு டால்பின். இது மீன் அன்று. பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இதில் 50 வகைகள் உள்ளன. இதற்கு 2 மூளைகள் உண்டு. இது அதிகம் தூங்குவதில்லை. அப்படியே தூங்கினாலும் ஒரு கண்ணை மட்டுமே மூடித் தூங்கும்.
கிளிமீன், மன்டா திருக்கை போன்ற மீன்கள் தங்கள் உடல் மற்றும் பற்களைச் சுத்தம் செய்ய கிளீனர் பிஷ் எனப்படும் சிறு மீன்களைத் தேடுகின்றன. உடம்பில் உள்ள இறந்த செல்கள், பற்களின் இடையில் சிக்கிய உணவுத் துகள்களைச் சுத்தம் செய்து விடுகின்றன கிளீனர் மீன்கள். இந்தக் குட்டி மீன்களைப் பெரிய மீன்கள் சாப்பிடுவதில்லையாம்.