உலக நாடுகள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு(CENTRAL AFRICAN REPUBLIC)
தலைநகரம்: பாங்கி (Bangui)
பரப்பளவு: 240,534 சதுர மைல்
அலுவலக மொழிகள்: சாங்கோ, பிரெஞ்சு
மக்கள் தொகை: 4,709,000
அதிபர்: கேத்ரின் சம்பாபன்ஷா (Catherine Sambapanza)
பிரதமர்: மகமத் கமூன் (Mahamat Kamoun)
நாணயம்: ஃப்ராங்க் (Franc)
அமைவிடம்: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு ஆகும். இதன் வடக்கே சாட், கிழக்கே சூடான், தெற்கே கோங்கோ குடியரசு மற்றும் கோங்கோ ஜனநாயகக் குடியரசு, மேற்கே கேமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
சிறப்புச் செய்திகள்: உலகின் 45ஆவது பெரிய நாடு ஆகும். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பெரும்பகுதி சூடான்_குயினியன் புல்புதர் காடுகளால் ஆனது. ஆனால் வடக்கே சஹெலோ_சூடான் நிலமும் தெற்கே நிலநடுக் கோட்டுக் காடுகளும் உள்ளன. கோங்கோ ஆற்றில் பாயும் உபாங்கி ஆற்றின் கரைகளில் இந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அமைந்துள்ளது. மீதி ஒரு பங்கு சாரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது.
இந்த நாட்டினை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் இதனை உபாங்கி-_சாரி என அழைத்தனர். 1960ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து விடுதலை பெற்று தற்போதுள்ள பெயரைப் பெற்றது. வைரச் சுரங்கங்கள் அதிகம் இருந்தபோதிலும், திடமான அரசு இல்லாததால் முறையானபடி பயன்படுத்தப்-படவில்லை.