செவ்வாய் கிரகத்தில் ஏரி
செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் கிரேட்டர் பகுதியில் 2012ஆம் ஆண்டு தரையிறங்கிய அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகே விண்கல் ஒன்று மோதியதில் 96 மைல் பரப்பளவுள்ள பெரிய பள்ளம் உருவானதைத் தற்போது கியூரியாசிட்டி படம் எடுத்து அனுப்பியுள்ளது.
மூன்று மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் என்ற மலையிலிருந்து வரும் நீரானது கேல் பள்ளத்தாக்கின் மய்யப் பகுதியை வந்தடைகிறது. ஷார்ப் மலையானது அடுக்கடுக்கான படிவப் பாறைகளால் அடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. கேல் பள்ளத்தாக்கை இலக்காக நிர்ணயித்த நாசா ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை இது ஈர்த்துள்ளது.
கியூரியாசிட்டி விண்கலம் தற்போது ஷார்ப் மலையின்மீது ஏறத் தொடங்கியுள்ளது. அந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு அடுக்கும் அது உருவான நேரம் மற்றும் அப்போதிருந்த புவியியல் நிலைமைகளை அதனுள்ளே கொண்டுள்ளது.
எனவே, ஒவ்வோர் அடுக்கும் செவ்வாய் கிரகத்தின் வரலாற்றின் ஒரு பக்கமாகவே பார்க்கப்படுகிறது. வெதுவெதுப்-போடும், ஈரப்பதத்தோடும் ஒரு காலத்தில் இருந்த செவ்வாய் கிரகம் எவ்வாறு உலர்ந்து போனது என்பதைக் கண்டறிய அறிவியலாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று அறிவியலாளர் ஜான் குரோட்ஜிங்கர் கூறியுள்ளார்.
மேலும், பூமியில் உயிர்கள் வாழ்வதுபோல செவ்வாய் கிரகத்திலும் வாழ முடியும் என்பதற்கு ஆதாரமாக இதனைக் கருத முடியும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.