உலக நாடுகள் – கிறிஸ்துமஸ் தீவு(CHIRISTMAS ISLAND)
தலைநகரம்: ஃபிளையிங் பிஷ் கோவ் (Flying Fish Cove)
பரப்பளவு: 52 சதுரை மைல்கள்
அலுவலக மொழி: ஆங்கிலம்
பிறமொழிகள்: சீனம், மலாய்
அரசி: இரண்டாம் எலிசபெத்
ஆளுநர்: சர் பீட்டர் கோஸ்க்ரோவ் (Sir Peter Cosgrove)
நிருவாகி: பாரி ஹாஸ் (Barry Haase)
நாணயம்: ஆஸ்திரேலியன் டாலர்
அமைவிடம்: இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப் பகுதியாகும். வடக்கில் 500 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தோனேசியத் தலைநகரமாகிய ஜகார்த்தாவும், தென்கிழக்கில் 2600 கிலோ மீட்டர் தூரத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரமும் வடக்கில் 975 கிலோ மீட்டர் தூரத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கொக்கோஸ் ஹீலிங் தீவுகளும் உள்ளன.
சிறப்புச் செய்திகள்: பிரிட்டானியக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ரோயல் மேரி கப்பலின் தலைவர் கேப்டன் வில்லியம் மைனர்சு என்பவர் 1643ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று இந்தத் தீவினைக் கடந்து சென்றபோது கிறிஸ்துமஸ் தீவு என்று பெயர் வைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தீவில் ஆயிரக்கணக்கான நண்டுகள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெரிய நண்டுகள் மனிதர்களுக்குத் துன்பம் கொடுப்பதுடன், தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் ஆற்றல் பெற்றவை. பறித்த தேங்காய் கீழே விழுந்ததும் கீழே இறங்கி வந்து அழகாக உடைத்துச் சாப்பிடுகின்றன. வீதிகளில் கூட்டமாகச் செல்லக்கூடியன.
இங்கு காணப்படும் கோல்டன் போசுன் (Golden Bosun) என்ற பறவை தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ளது. இதன் வால் மிக நீளமானது. மரப் பொந்துகளில் வாலினைச் செலுத்தி அங்கிருந்து வெளிவரும் பூச்சிகளைச் சாப்பிடுகிறது. இங்கு பாஸ்பேட் அதிக அளவில் கிடைக்கிறது.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவை நோக்கி வரும் இந்தோனேசியா, இலங்கை மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் படகுகள், கப்பல்கள் இந்தத் தீவிற்கு அருகில் வைத்தே ஆஸ்திரேலியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
முதலில் கிறிஸ்துமஸ் தீவில் தங்க வைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் தகுதியானவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்-படுகின்றனர். இந்தத் தீவின் பாதுகாப்புப் பொறுப்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்ததாகும்.