குக் தீவுகள் (COOK ISLANDS)
உலக நாடுகள்
குக் தீவுகள் (COOK ISLANDS)
தலைநகரம்: அவரு (Avarua)
பரப்பளவு: 91 சதுர மைல்
மக்கள்தொகை: 19,569
அலுவலக மொழி: ஆங்கிலம், மௌரி (Maori)
அரசி: இரண்டாம் எலிசபெத்
அரசியின் பிரதிநிதி: டாம் மார்ஸ்டெர்ஸ் (Tom Marsters)
பிரதமர்: ஹென்றி புனா (Henry Puna)
நாணயம்: நியூசிலாந்து டாலர்.
அமைவிடம்: தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு ஆகும். வடகிழக்கில் நியூசிலாந்து உள்ளது. ஃப்ரெஞ்ச் பொலினிசியா மற்றும் அமெரிக்கன் சமோவாவுக்கு நடுவில் அமைந்துள்ளது.
சிறப்புச் செய்திகள்
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட 10 மணி நேரம் குறைவானது ஆகும். பொருளாதாரம் சுற்றுலாவினை எதிர்பார்த்தே அமைந்துள்ளது. இயற்கை வளங்கள் இல்லாததால் பிற நாடுகளின் உதவியினை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
நியூசிலாந்து பெரும்பான்மையான நிதி உதவியினை அளித்து வருகிறது. 1965ஆம் ஆண்டு நியூசிலாந்திடமிருந்து சுயாட்சி பெற்றது. எனினும் நியூசிலாந்தின் கூட்டமைப்புடன் செயல்பட்டுவரும் நாடாகவே திகழ்கிறது. 15 பெரிய தீவுகளை உள்ளடக்கி-யுள்ளது.
வடக்கு குக் தீவுகள், தெற்கு குக் தீவுகள் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவுகள் அனைத்தும் எரிமலையின் விளை-வினால் ஏற்பட்டவையாகும்.