எழுத்துப் பிழைகளை எச்சரிக்கும் எழுதுகோல்
எழுத்துப் பிழைகளை எச்சரிக்கும் எழுதுகோல்
எழுதும்போது எழுத்துப் பிழை என்பது எல்லோருக்கும் வருவதுதான். கணினியில் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் பிழைகளை ஆட்டோ கரெக்சன் முறையின்மூலமாக சரி செய்து கொள்ளலாம். எழுதும்போது ஏற்படும் பிழைகளை எச்சரிக்கும் (ஆட்டோ கரெக்சன்) எழுதுகோல் (பேனா) உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் கைகளால் எழுதும் எழுத்துகள் 2டி பாத் மூலம் கணக்கிடப்படுகின்றன. எழுதும்போது பிழை ஏற்பட்டால் சிறிதளவு அதிர்வு (Vibrate) ஏற்படும். தொழில்நுட்பம் மற்றும் மென் பொருள்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த எழுதுகோலில் பிராசஸர், மோஷன் சென்சார், வைஃபை, வைப்ரேசன் மாட்யூல் மற்றும் மெமரி கார்டு ஆகியன பொருத்தப்-பட்டுள்ளன. இது லினக்ஸ் மென்பொருள் சார்ந்ததாகும்.