பெரியாரைப் பாடிய பிஞ்சு
பெரியாரைப் பாடிய பிஞ்சு
எப்பொழுதுமே சிறார்களைக் காணும்-பொழுதும், அவர்களிடம் பேசும்பொழுதும் உறங்கிக்கிடக்கும் உற்சாகம் பொங்கி எழுந்துவிடும். 12.04.2015 ஞாயிறு அன்று எல்.கே.ஜி பயிலும் குட்டிப்பெண் த.தமிழரசியைச் சந்தித்தபோது அப்படிப்பட்ட ஓர் உணர்ச்சி மீண்டும் ஏற்பட்டது.
கடந்த 13.02.2015 அன்று பட்டாபிராம் பகுதியில் உள்ள, குட்வில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் சிறார்கள் அவரவர்க்குத் தெரிந்த ஆடல் பாடல்களை ஆடிப்பாடி பேசி பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கின்றனர். அதில் மேலே சொன்ன குட்டிப்பெண் த.தமிழரசியும் ஒருவர்.
மற்றவர்கள் பேசியதும், தேர்வு பெற்றதும் பெரிய காரியமாகத் தெரியவில்லை. தமிழரசி தேர்வானதுதான் ஆச்சரியத்தைக் கொடுத்தது. சரி, அப்படி என்னதான் பாடினார் தமிழரசி. புரட்சிக்கவிஞரின் பாடலைத்தான். அதுவும் தந்தை பெரியாருக்கு இலக்கணம் வகுத்துத் தந்த பாடலை… ஆம். தொண்டு செய்து பழுத்த பழம் _ பாடலைப் பாடித்தான் பரிசு பெற்றிருக்கிறார்.
தமிழரசியின் பெற்றோர் தே.தமிழ்நெறி _ வசந்தா ஆவர். இதில் தே.தமிழ்நெறி பகுத்தறிவாளர் கழகத்தின் ஆவடி மாவட்ட அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கூடுதல் தகவல். பள்ளியின் நிறுவனர் திருமதி. பிரேமா மற்றும் முதல்வர் லட்சுமி இருவரும் முற்போக்குக் கருத்துகளை ஆதரிக்கின்றவர்கள்.
குட்டீஸ்களைப் பார்க்கும்போது மட்டுமல்ல, இப்படிக் கேட்கும்போதும் நமக்குள் உற்சாகம் பொங்கி எழுகிறது. நாளைய சமூகத்தைப் பற்றிய நம்பிக்கையும் பிறக்கிறது.
_ பெரியார் பிஞ்சு வாசகன், கருத்தோவியன்