உலகத்தை வண்ணமாக்குபவர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஜான் பிராம்ப்லட் என்ற ஓவியர் வசித்து வருகிறார். பார்வையற்றவரான ஜான் ஆழ்ந்த அடர்த்தியான வண்ணங்களில் கண்களைக் கவரும் வித்தியாசமான ஓவியங்களை வரைகிறார்.
இரண்டு வயதில் வந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்ட கண்பார்வையானது குறைந்துகொண்டே வந்து 2001ஆம் ஆண்டில் முழுவதும் தெரியாமல் போய்விட்டது.
தனது பார்வை இழப்பு பற்றி திடீரென்று பார்வையற்றவர்களின் வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. என்ன செய்வது என சிந்தித்தேன். என் உலகம் இருட்டாகிவிட்டாலும் பிறருக்கான உலகத்தை வண்ணமயமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் என்று ஜான் கூறியுள்ளார்.
முதலில் ஃபெவிகால் மூலம் வெளிக்கோடுகளால் (Outline) வரைந்துகொண்டு, காய்ந்த பின்னர் கைகளால் தடவிப் பார்த்து வண்ணங்களைத் தீட்டுகிறார். 14 மணி நேரத்தில் முழுமையடையும் இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது பார்வையற்ற ஒருவர் வரைந்தது என யாராலும் சொல்ல முடியாது.
பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இந்த ஓவியர் வரைவதைக் காணொலியில் காணுங்கள். இவர் பார்வையற்றவரானாலும் ஓர் ஆவணப் படம் தயாரித்துள்ளதுடன், பல குறும்படங்களை இயக்கி விருதுகளையும் பெற்றுள்ளார்.