மரத்தால் செய்யப்பட்ட மகிழுந்து
மகிழுந்து என்றதும் நம் நினைவிற்கு வருவது கார்பன், ஃபைபர், அலுமினிய பாகங்களில் செய்யப்பட்டு சாலைகளில் செல்பவைதானே. மரத்தினால் செய்யப்-பட்டதைப் பார்த்திருக்கிறீர்களா?
பிஞ்சுகளாகிய நீங்கள் விளையாடி மகிழ்ந்த பொம்மை மகிழுந்து அல்ல. தேக்கு மரத்தினால் செய்யப்பட்டு, சாலையில் ஓட்டிச் செல்லும் அனைத்துச் சிறப்புகளும் நிறைந்ததைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் வசிக்கும் அமன்தீப் சிங் என்ற இளைஞரால் வடிவமைத்து உருவாக்கப்பட்டதே இந்தத் தேக்கு மர மகிழுந்து. தச்சு வேலை செய்யும் தனது தந்தையின் ஒத்துழைப்புடன் இரண்டரை மாதங்களில் உருவாக்கியுள்ளார்.
உறுதியுடனும் பளபளப்புடனும் இருப்பதற்காக தேக்கு மரத்தினைப் பயன் படுத்தியதாகவும், இதுவரை 20,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ள-தாகவும், செல்லும்போது அனைவரும் வியப்புடன் பார்ப்பதாகவும் அமன்தீப் கூறியுள்ளார்.