புளூட்டோவில் குட்டி நிலாக்கள்
புளூட்டோவில் குட்டி நிலாக்கள்
சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களுள் மிகச் சிறிய கிரகம் புளூட்டோ என்று படித்திருப்பீர்கள். இது 1930ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய கிரகமாக இருப்பதால் இதனைச் சூரிய மண்டலத்தில் ஒன்றாகச் சேர்க்கக் கூடாது என பன்னாட்டு வானியல் ஆய்வுக் கழகத்தால் குட்டிக் கிரகம் என அறிவிக்கப்பட்டது.
குட்டிக் கிரகமான புளூட்டோவை ஆராய்ச்சி செய்ய 9 ஆண்டுகளுக்கு முன்பு ஹோரிசான்ஸ் விண்கலத்தினை அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா அனுப்பியது. மேரிலாண்டில் உள்ள லாரல் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் அறிஞர்களால் வடிவமைத்து அனுப்பப்பட்ட இந்த விண்கலம் தற்போது புளூட்டோவையும் அதன் மேற்பரப்பையும் பல்வேறு கோணங்களில் படம் எடுத்து அனுப்பி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதிவரை புளூட்டோவின் நிக்ஸ் மற்றும் ஹைடிரோ என்ற இரண்டு துணைக்கோள்களின் புகைப்படங்களை அனுப்பியது. இந்தக் புகைப்படத்தின் உதவியுடன் இந்த இரு துணைக்கோள்களும் புளூட்டோவை எவ்வாறு சுற்றி வருகின்றன என்பதை விளக்கும் குறும்படம் நாசாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹைடிரோ என்பது புளூட்டோவின் பெரிய நிலா ஆகும். புளூட்டோவிலிருந்து 64,700 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் ஹைடிரோ 38 நாள்களுக்கு ஒரு முறையும், 48,700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிக்ஸ் 25 நாள்களுக்கு ஒருமுறையும் புளூட்டோவைச் சுற்றி வருகின்றன. ஸ்டைக்ஸ் மற்றும் கொப்ரோஸ் என இரண்டு குட்டி நிலவுகளும் உள்ளன. இவை தவிர சரோன், பிளென்ட்ஸ் ஆகியனவும் உள்ளன.
சரோன் 2013ஆம் ஆண்டிலும், ஹைடிரோ 2014லும், நிக்ஸ் 15லும், கொப்ரோஸ் 2011லும், ஸ்டிக்ஸ் 2012லும் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளன.