பறக்கலாம் வாங்க
பறவைகளைப் பார்க்கும்போது நாமும் பறந்தால் எப்படி இருக்கும் என நினைப்-போம்தானே. ஆகாய விமானத்தைப் பார்க்கும்போது நாமும் இதனுள் அமர்ந்து செல்ல மாட்டோமா என்ற ஏக்கம் வரும்தானே… பணம் இருந்தால் ஆகாய விமானத்தில் பறக்கலாம். பறவையைப் போல… எப்படிப் பறப்பது என நினைத்திருப்பீர்கள் எனில் பறக்க முடியும் என காட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பைலட் யுவஸ் ரோசி மற்றும் ஸ்கை டைவரான வின்ஸ் ரெப்பட் ஆகியோர். இவர்கள் மனிதனே விமானமாக மாறிப் பறக்கும் ஜெட் பேக் ஸ்கை டைவிங் சாகசத்தைச் செய்துள்ளனர். ஸ்கை டைவிங்கின் அடுத்த வளர்ச்சி என இதனைக் கூறலாம்.
ஜெட் என்ஜினை உடலில் மாட்டிக்கொண்டு பறந்து சென்று பார்த்தோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். ஜெட் என்ஜின் பொருத்தப்-பட்ட ஸ்கை டைவிங்கை கீழே செய்ய முடியாது. விமானம் அல்லது ஹெலிகாப்டரில் மேலே சென்று அங்கிருந்து குதித்துத்தான் ஜெட் என்ஜினை இயக்கி நம் விருப்பத்திற்குப் பறக்க முடியும். ஹெலிகாப்டர், விமானங்களைப் போலவே நீண்ட தூரத்திற்கு அதிக வேகத்தில் செல்ல முடியும் என்று ரோசி கூறியுள்ளார்.
இவர் பிரெஞ்சு விமானப்படையில் போர் விமானியாக இருந்தவர். உலகிலேயே ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டு மேலே பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ரோசி பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ஆங்கிலக் கால்வாய், கிரான்ட் கன்யான் மௌன்ட் புஜி ஆகியவற்றின்மீது ஜெட் என்ஜினைப் பொருத்திக்கொண்டு பறந்துள்ள ரோசி, ஆல்ப்ஸ் மலைக்கு மேலே இரண்டு போர் விமானங்களைத் துரத்திப் பறந்து அதிர வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் துபாயில் இவர்கள் செய்து காட்டிய வான வேடிக்கையை காணொளியில் காணுங்கள்.